மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவு பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழையினால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் தானியங்கி வான்கதவொன்று இன்று காலை திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் மழைபெய்யும் பட்சத்தில் ஏனைய வான்கதவுகளையும் திறக்கவேண்டிய நிலை ஏற்படுமென அவர் தெரிவித்தார். அதற்கமைய தாழ்நில பகுதிகள் மற்றும் கொத்மலை ஓயாவில் இருபுறமும் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டுமென நீர்ப்பாசன திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வான்பாயும் எல்லையை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.