எல்பிட்டிய பிதேச சபை தேர்தலின் கண்காணிப்பு பணிகள் ஆரம்பம்
Related Articles
எல்பிட்டிய பிதேச சபை தேர்தலின் கண்காணிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துறைசார் கண்காணிப்பாளர்கள் இன்று முதல் கடமையில் ஈடுபட்டுள்ளதாக தேர்தல் செயற்பாடுகளை கண்காணிக்கும் மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாதம் 13 ம் திகதி வரை தேர்தல் கண்காணிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
வாக்களிப்பு தினத்தின் போது இரு குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுமென அவர் குறிப்பிட்டார். தேர்தல்கள் ஆணையகம் , பொலிசார் மற்றும் கண்காணிப்பு குழுவினர் இணைந்து தேர்தலை அமைதியான முறையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலைய ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பை எதிர்வரும் 27 ம் திகதி நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவத்தாட்சி அதிகாரி சோமரத்ன விதாரண பத்திரண தெரிவித்துள்ளார். ஒக்டோபர் மாதம் 11 ம் திகதி எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்களிப்பு 47 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.