சவுதி எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து எரிபொருள் விலை அதிகரிப்பு
Related Articles
சவுதி அரேபிய எரிபொருள் சுத்திகரிப்பு நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலையடுத்து எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவு எரிபொருள் விலை உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சவுதியில் மீண்டும் எரிபொருள் உற்பத்தி ஆரம்பமாகும் வரை அமெரிக்காவின் எரிபொருள் சேமிப்பை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதேவேளை தாக்குதலுக்கு பின்னர் நாளொன்றில் மேற்கொள்ளப்படும் 5.7 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய தகவல்கள் தெரிவிக்கின்றன.