fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஹங்வெல்ல – எம்புல்கம சந்தியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2019 10:55

ஹங்வெல்ல – எம்புல்கம சந்தியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ஹங்வெல்ல, எம்புல்கம சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ரணால – ஜல்தர பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதானவரென பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 16, 2019 10:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க