fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2019 16:50

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஒசாமா பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவரான ஹம்ஸா பின்லேடனை கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. இதனையடுத்து அவரைக் கைதுசெய்யும் நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் நாட்டு எல்லைப் பகுதியில் பதுங்கியிருந்த ஹம்சா பின்லேடன் அமெரிக்க பயங்கரவாத ஒழிப்பு கூட்டுப் படையினரால் கொல்லப்பட்டுள்ளதுடன், அதனை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 15, 2019 16:50

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க