புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயம்
Related Articles
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளிய செம்பெட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர. தலவில புனிய அன்னம்மாள் ஆலய விசேட தேவ ஆராதனையில் பங்கேற்பதற்கென சென்று, மீண்டும் வீடு திரும்பும் வழியில் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. யாத்திரீகர்களை ஏற்றிச்சென்ற வேன், முச்சக்கர வண்டியொன்றை முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.