ஹபரண – தம்புள்ளை வீதியின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்
Related Articles
ஹபரண – தம்புள்ளை வீதியின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தங்க வீதி வேலைத்திட்டத்தின் கீழ் இதற்கென 3 ஆயிரத்து 155 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. மரதன்கடவெல, அம்பகஸ்வௌ, கொல்லன்குட்டிகம, கெக்கிராவ, கனேவெல்பொல, ஹபரண, தம்புள்ளை உள்ளிட்ட பல பிரதேசங்களை இணைக்கும் வகையில் குறித்த வீதி அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகிறது.
சீரற்ற நிலையில் வீதி காணப்பட்டமையினால் அதனை பயன்படுத்தும் பலர் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர். இதேவேளை வீதி அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் அமைச்சர்களான கபீர் ஹாசிம், ச்சந்திராணி பண்டார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.