இலங்கைக்கு போதைப்பொருள் இறக்குமதி செய்த பாகிஸ்தான் பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 18:01

இலங்கைக்கு போதைப்பொருள் இறக்குமதி செய்த பாகிஸ்தான் பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை

இலங்கைக்கு ஹெரோயின் போதைப்பொருள் இறக்குமதி செய்த பாகிஸ்தான் பிரஜைகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் மீது மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அவை நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சந்தேகநபர்களில் நால்வர் சுங்கப்பிரிவினர் மூலமும் மூவர் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் மூலமும் கைதுசெய்யப்பட்டனர். அவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போது சந்தேகநபர்கள் தம்மீதான குற்றங்களை ஏற்றுக்கொண்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 18:01

Default