fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாதுராகொட பகுதியில் மதுபானம் விஷமாகிய சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் சாட்சி பதிவு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 13:15

பாதுராகொட பகுதியில் மதுபானம் விஷமாகிய சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் சாட்சி பதிவு

மீரிகம பாதுராகொட பிரதேசத்தில் மதுபானம் விஷமாகிய சம்பவம் தொடர்பில் மீண்டும் சாட்சியங்களை பெற பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சட்டவிரோத மதுபானத்தை அருந்தியமையினால் மீரிகம பாதுராகொட பிரதேசத்தில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து இவ்வாறு மீண்டும் சாட்சிகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 20 சாட்சியாளர்களிடம் இருந்து சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 13:15

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க