அக்குரஸ்ஸ துப்பாக்கி பிரயோக சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 13:23

அக்குரஸ்ஸ துப்பாக்கி பிரயோக சந்தேகநபர்கள் விளக்கமறியலில்

அக்குரஸ்ஸ பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் மாத்தறை பதில் மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் 3 பேரை அடையாள அணி வகுப்பிற்கு நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாணந்துரை பொலிஸ் நிலையத்தில் களவாடப்பட்ட ரி-56 ரக துப்பாக்கியே இந்த துப்பாக்கி பிரயோகத்தின் போது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 13:23

Default