தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த 64 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 13:22

தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த 64 சந்தேகநபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த 64 சந்தேகநபர்கள் எதிர்வரும் 26ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா முகாமில் இவர்கள் ஆயுத பயிற்சி பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். மட்டக்களப்பு மஜிஸ்திரேட் ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 13, 2019 13:22

Default