ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஸ்மித் விராட் கோஹ்லியை விட 34 புள்ளிகள் அதிகம் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறார். ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி முதல் இடத்தில் இருந்தார்.
ஓராண்டு தடைக்குப்பின் ஆஷஸ் தொடரில் களம் இறங்கிய அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஸ்மித் முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசினார். இதனால் விராட் கோலியை நெருங்கினார் ஸ்மித். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் விராட் கோஹ்லி டக்அவுட் ஆக சறுக்கல் ஏற்பட்டது. ஒரு புள்ளி வித்தியாசத்தில் விராட் கோஹ்லியை (903) பின்னுக்குத் தள்ளி ஸ்மித் (904) முதல் இடம் பிடித்தார்.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஸ்மித் 211 மற்றும் 82 ஓட்டங்களை ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்றார்.
தற்போது வெளியிட்டுள்ள தரவரிசையில் ஸ்மித் 937 புள்ளிகள் பெற்று விராட் கோஹ்லியை விட 34 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 903 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.