பிக்குமாணவர்களை தாக்கிய நபர் கைது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 13:07

பிக்குமாணவர்களை தாக்கிய நபர் கைது

பிக்குமாணவர்களை தாக்கிய கம்மெத்தே சமிந்த கலபொட எனும் உட்டியா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 பிக்குமார்களை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய ஒளிநாடாவொன்று சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதையடுத்து இது குறித்து பலரும் கவனம் செலுத்தியிருந்தனர். இதன் ஊடாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளனின் போது குறித்த சந்தேக நபர் கைத செய்யப்பட்டார். இவர் தற்போது ஹொரவுபத்தான பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை தாக்குதல் நடத்திய நபராக சித்தரித்து புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்கள் ஊடாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இப்புகைப்படத்தில் உள்ள நபர் வெளியிட்டுள்ள ஒளிநாடாவில் தனக்கும் இச்சம்பவத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லையென தெரிவித்துள்ளார். தான் தற்போது கட்டார் இராச்சியத்தில் சேவை புரிந்து வருவதாகவும் அவர் இதன் மூலம் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 13:07

Default