fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பதவிக்கு ட்ரம்ப் தகுதியற்றவரென மக்கள் கருத்து

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 13:11

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி பதவிக்கு ட்ரம்ப் தகுதியற்றவரென மக்கள் கருத்து

மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாவது பொருத்தமற்றதென அமெரிக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் குறித்து சி.என்.என். நிறுவனம் மக்களிடம் கருத்து கணிப்பொன்றை நடத்தியது. அதில் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தெரிவாவது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது அவர் மீண்டும் தெரிவுசெய்யப்படுவது பொருத்தமற்ற விடயமென பெரும்பான்மையான மக்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கர்களில் பத்தில் 6 பேர் இந்த நிலைப்பாட்டிலுள்ளதாக சி.என்.என். நிறுவனம் தெரிவிக்கிறது. கடந்த காலங்களில் டொனால்ட் ட்ரம்பின் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சர்வதேச வர்த்தகம், வெளிநாட்டு உறவுககள் மற்றும் சுற்றாடல் கொள்கை ஆகிய விடயங்களில் டொனால்ட் ட்ரம்பின் கொள்கைக்கு அம்மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதேவேளை அகதிகள் தொடர்பான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கைக்கு பெரும்பான்மையான மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சி.என்.என். நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 13:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க