fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

செப்டம்பர் 11 தாக்குதலுக்கு 18 வருடங்கள் பூர்த்தி

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 13:05

செப்டம்பர் 11 தாக்குதலுக்கு 18 வருடங்கள் பூர்த்தி

அமெரிக்காவில் சுமார் 3 ஆயிரம் உயிர்களை பலிகொண்ட கொடிய பயங்கரவாத தாக்குதலாக கருதப்படுகின்ற 11 தாக்குதலின் 18 ஆம் ஆண்டு நிறைவு இன்றாகும்.

இது அமெரிக்காவை மட்டுமன்றி உலகின் போக்கையே மாற்றியமைத்த சம்பவமாக கருதப்படுகின்றது. 911 இல்லாவிடில் செப்டம்பர் 11 தாக்குதலானது அமெரிக்க வரலாற்றில் அழிக்க முடியாத சம்பவமாகும். 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அம் திகதி அல்கைதா பயங்கரவாதிகள் நியூயேர்க்கிலுள்ள உலக வர்த்தக மைய கட்டிட கோபுரத்தையும் பெண்டகனையும் இலக்கு வைத்தே இத்தாக்குதலை நடத்தினர். அல்கைதா பயங்கரவாதிகள் கடத்திய 4 அமெரிக்க பயணிகள் விமானங்களை இத்தாக்குதலுக்கென பயன்படுத்தினர். இவற்றின் 2 விமானங்கள் உலக வர்த்தக மையத்தின் வடக்கு மற்றும் தெற்கு கோபுரங்களில் மோதி வெடிக்கச் செய்யப்பட்டன. இதன் போது அவ்விரு கோபுரங்களும் முற்று முழுதாக அழிpக்கப்பட்ட்ன. 3 வது விமானம் அமெரிக்காவின் பாதுகாப்பு தலமையகமான பென்டகன் மீத வீழ்ந்து நொருங்கியத. இதில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்ததுடன் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கயமடைந்தனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க