உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு மற்றுமொரு சான்றிதழ்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 13:02

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு மற்றுமொரு சான்றிதழ்

தாயிடமிருந்து பிள்ளைக்கு எச்ஐவி வைரஸ் தொற்றுவதை ஒழித்த நாடாக இலங்கை காணப்படுவதற்குரிய சான்றிதழை உலக சுகாதார ஸ்தாபனம் கூடிய விரைவில் வழங்குமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். டி.சொய்ஸா மகளிர் வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

” கடந்த வருடம் உலக சுகாதார தினத்தை கொண்டாடுவதற்காக வருகை தந்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமான டொக்டர் டெட்ரோஸ் உலகில் மிகவும் சிறந்த மட்டத்தில் சுகாதார சேவை இலங்கையில் காணப்படுவதாக தெரிவித்தார். வருடந்தோறும் தொற்று நோய்களில் ஒன்று உங்களின் முழு பங்களிப்புடன் இல்லாதொழிக்கப்பட்டன. நேற்று முன்தினம் நான் புது டில்லியில் இருந்தேன். சின்னமுத்து நோயிலிருந்து விடுபட்ட நாடாக இலங்கை காணப்படுவதாக அங்கு தெரிவிக்கப்பட்டது. இது 5 வது சான்றிதழாகும். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தாயிடமிருந்து பிள்ளைக்கு எச்ஐவி வைரஸ் தொற்றுவதை தடுத்தமைக்கான சான்றிதழ் கிடைக்கவுள்ளது. இது 6 வது வெற்றியாகும்” என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பு டி.சொய்ஸா மகளிர் வைத்தியசாலையில் நான்கு மாடிகளை கொண்ட விசேட தாய்சேய் பிரிவின் நிர்மாண பணிகள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. ராஜாங்க அமைச்சர் பைசல் காசிமும் இதன் போது பிரசன்னமாகியிருந்தார். விசேட தாய்சேய் பிரிவை நிர்மாணிப்பதற்காக 250 மில்லியன்ரூபா நிதி செலவிடப்படும். 2 வருடங்களுக்குள் இவ்வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளுக்கென 590 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 13:02

Default