fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 3 குடியிருப்பு தொகுதிகள் மக்கள் உரிமைக்கு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 12:55

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 3 குடியிருப்பு தொகுதிகள் மக்கள் உரிமைக்கு

கொழும்பு நகரில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 3 குடியிருப்பு தொகுதிகள் மக்களின் உரிமைக்க திறந்து வைக்கப்படவுள்ளன. எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இவை கையளிக்கப்படவுள்ளதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கிறது. வேலைத்திட்டத்திற்கென அரசாங்கம் 15 ஆயிரத்து 924 மில்லியன் ரூபாவினை செலவிட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை சகலருக்கும் நிழல் தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கில் புதிதாக 700 மாதிரிக்கிராமங்கள் அமைக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனைக்கமைய நாடளாவிய ரீதியில் வீடமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடமாகணத்தில் யாழ்ப்பாணம் , மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வேலைத்திட்டங்கள் ஊடாக இதுவரை 55 ஆயிரம் பேர் நன்மையடைந்துள்ளதாக அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 12:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க