fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு : மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு விசேட எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 12:56

கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பு : மீனவர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களுக்கு விசேட எச்சரிக்கை

நாட்டின் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும். இதேவேளை சில கடற்பகுதிகளில் இடியுடன் கூடிய மழையின் போது மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதோடு குறித்த கடற்பகுதிகள் கொந்தளிப்பாகவும் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹிக்கடுவை முதல் காலி வரையான கடற்பிரதேசங்கள் தொடர்பில் கடற்றொழில் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. ஹிக்கடுவை, காலி, வெலிகம, மிரிஸ்ஸ, மாத்தறை ஆகிய கடற்பகுதிகளுக்கு இன்று பிற்பகல் வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு செல்லவேண்டாமென கடற்றொழில் திணைக்களத்தின் சுற்றிவளைப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் பத்மப்ரிய திசேரா தெரிவித்துள்ளார். குறிப்பாக சிறிய படகுகள் மற்றும் ஒருநாள் மீன்பிடியில் ஈடுபடும் படகுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமெனவும், கடல் அலைகள் உயரக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு அமையவே இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் சுற்றிவளைப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் பத்மப்ரிய திசேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஏற்படக்கூடிய எந்தவொரு அனர்த்த நிலைமைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், கடற்றொழில் பிரிவு, கடற்படையினர், பொலிஸார் உள்ளிட்ட சகல பிரிவுகளுக்கும் இது தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூன்று மொழிகளிலும் பதில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 12:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க