fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தென் கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் : வளிமண்டலவியல் திணைக்களம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 12:52

தென் கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம் : வளிமண்டலவியல் திணைக்களம்

ஹிக்கடுவயிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கடலுக்கு அப்பாலுள்ள ஆழ்கடலிலும் கடற்பரப்பும் திடீரென கொந்தளிப்பாகி காற்றின் வேகமும் திடீரென அதிகரிக்கலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலில் பயணிப்போரும் மீனவ சமூகமும் இது குறித்து கூடிய கவனத்துடன் செயல்படுமாறு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எந்தவொரு இடர் நிலைமைக்கும் முகம் கொடுக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

“பலத்த காற்றுடன் கூடிய பலத்தமழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று காலை 10 மணியளவிலேயே இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணி வரை இவ்வறிவுறுத்தல் அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை போன்று ஹிக்கடுவையிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையிலான கடற்பகுதிக்கு அப்பால் உள்ள ஆழ்கடல் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் பலத்த காற்றும் வீசலாமெனதெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 70 இற்கும் 80 இற்கும் இடைப்பட்ட கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இச்சந்தர்ப்பத்தில் கடலானது கடும் கொந்தளிப்பாக காணப்படும். மீனவர்களும் கடலில் பயணிப்போரும் இது குறித்து கூடிய அவதானத்துடன் இருக்க வேண்டுமென நாம் கேட்டுக் கொள்கின்றோம். சகல மாவட்டங்களிலும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையங்களினால் கடற்படையினரும் பொலிஸாரும் மீனவ சமூகத்தினரும் இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 117 எனும் தொலைபேசி ஊடாக புதிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். தகவல்களை பெற்றுக் கொள்வதெற்கென மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். “

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க