எரிபொருள் விலையில் நேற்று (10) நள்ளிரவு முதல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு அமைய ஒக்டேன் 92 ரக ஒரு லீட்டர் பெற்றோலின் விலை ஒரு ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 137 ரூபாவாகும். ஒரு வீட்டர் ஒக்டேன் 95 இன் விலை 2 ரூபாவினாலும் ஒரு லீட்டர் சுப்பர் டீசல் 2 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதிளயமைச்சு தெரிவிக்கின்றது. எவ்வாறாயினம் ஒட்டோ டீசலின் விலையில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை. எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமையவே இவ்விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.