விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 09:36

விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழப்பு

பொலிஸ் கெப்ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். கண்டி – கொழும்பு பிரதான வீதியின் உத்துவன்கந்த பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. எரிபொருள் ஏற்றிச்சென்ற கொள்கலன் வாகனமொன்று இரவுநேர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கெப் வாகனத்தின் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 11, 2019 09:36

Default