fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தற்கொலை தடுப்பு சர்வதேச தினம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 15:19

தற்கொலை தடுப்பு சர்வதேச தினம்

இளம் வயதினர் உளவியல் நோயினால் அல்லது சவால்களை எதிர்கொள்ளும் சக்தி இல்லாமல் போகும் பொழுது தற்கொலை செய்து கொள்வோரை காணக்கூடியதாக உள்ளது. 2018 ஆம் ஆண்டு அறிக்கைக்கு அமைவாக இலங்கையில் நாளாந்தம் 8 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். உலகில் தற்கொலை செய்து கொள்வோரின் விகிதாசாரத்திற்கு அமைவாக எண்ணிக்கை பட்டியலில் உயர்நிலையில் காணப்பட்ட இலங்கை இந்த புள்ளிபட்டியலில் குறைந்த நிலையை அடைந்துள்ளது.
தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கும் நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் பொழுது மேற்கொள்ளப்படும் விஷேட சிகிச்சை மற்றும் ஆலோசனைச் சேவைகளில் காணப்படும் முன்னேற்றமே இதற்கு காரணமாகும்.
உளவியல் சுகாதார நிறுவனம் நடைமுறைப்படுத்தும் 24 மணித்தியால சேவையில் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாவோர் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளமுடியும். இந்த ஆலாசனைகளை 1926 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும். இது இலவசமாக வழங்கப்படும் ஆலோசனைச் சேவையாகும். தற்கொலை தடுப்பு சர்வதேச தினத்தை அனுஸ்டிக்கும் நிகழ்வு ஒன்று கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது
ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 15:19

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க