அமேசன் காட்டுத்தீ காரணமாக வளிமாசு அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. செய்மதி புகைப்படங்கள் சிலவற்றை ஆய்வுக்குட்படுத்திய போதே இவ்விடயம் தெரியவந்துள்ளது. அ
வை மாத்திரமன்றி மேலும் சில தரவுகளையும் இதற்கென பயன்படுத்தியதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. அமேசன் காட்டுத்தீ காரணமாக பிரேசிலை அண்மித்த வளிமண்டலத்தில் கடந்த மாதம் வளிமாசு அதிகரித்தது. இது காலநிலை மாற்றம் மற்றும் சுகாதாரத்துறைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்துமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.