fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 13:28

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்பு

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க 10 இலங்கை வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டுவெண்டி – 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

எதிர்வரும் 27ம் திகதி முதலாவது ஒருநாள் போட்டியும், 29ம் திகதி இரண்டாவது ஒருநாள் போட்டியும், ஒக்டோபர் 2ம் திகதி மூன்றாவது ஒருநாள் போட்டியும் கராய்ச்சியில் இடம்பெறவுள்ளது.

அதனைத்தொடர்ந்து ஒக்டோபர் 5ம் திகதி லாஹுரில் மூன்று போட்டிகளை கொண்ட டுவெண்டி – 20 தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் நேற்றையதினம் பாகிஸ்தானில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. எவ்வாறெனினும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள 10 இலங்கை வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் திமுத் கருணாரத்ன, டுவெண்டி – 20 போட்டிகளுக்கான அணித்தலைவர் லசித் மாலிங்க ஆகியோர் குறித்த 10 வீரர்களில் உள்ளடங்குகின்றனர்.

நிரோஷன் திக்வெல்ல, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, திசர பெரேரா, அகில தனஞ்சய, எஞ்சலோ மெத்தியூஸ், சுரங்க லக்மால், தினேஷ் சச்ந்திமால் ஆகியோர் இவ்வாறு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 13:28

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க