சட்டவிரோதமாக இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட நபரொருவர் கைது
Related Articles
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு செல்ல முற்பட்ட நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாதகல் துறை பகுதியில் கடற்டையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது இந்நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து இந்திய நாணயத்தாள்கள் சிலவும் கையடக்கத்தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அடுத்தகட்ட விசாரணைகளுக்காக சந்தேகநபர் இளவாழை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.