ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்ட ரீதியான அதிகாரம் இன்று முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 13:05

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்ட ரீதியான அதிகாரம் இன்று முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சட்டரீதியாக இன்று முதல் அதிகாரம் கிடைப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்றையதினம் தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இம்முறை தேர்தலின் போது 2018ம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியல் கருத்திற்கொள்ளப்படும். அதனால் கடந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் வாக்களித்தவர்களை விட 2 இலட்சம் பேர் மேலதிகமாக வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுவை ஏற்றுக்கொள்ளும் தினம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ம் திகதி முடிவடைகிறது. அன்றையதினம் முதல் 63 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவது அவசியமென அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இன்று முதல் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதால் அடுத்துவரும் தினங்களில் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ தினத்தை அறிவிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 13:05

Default