fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரான்சில் நிலவிய கடும் வெயில் தாக்கத்தினால் ஆயிரத்து 400க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 12:43

பிரான்சில் நிலவிய கடும் வெயில் தாக்கத்தினால் ஆயிரத்து 400க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

பிரான்சில் நிலவிய கடும் வெயில் தாக்கத்தினால் ஆயிரத்து 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் 46 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

இதனால் பிரான்சில் பலமுறை சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. மேலும் பாடசாலைகள் மூடப்பட்டதுடன் பொது நிகழ்ச்சிகளும் ரத்துச்செய்யப்பட்டன. குறித்த கடும் வெயில் தாக்கம் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் அதிகளவானோர் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பிரான்சிஸ் நிலவிய கோடைகால கடும் வெயிலினால் ஆயிரத்து 435 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 10, 2019 12:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க