சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 63 பேர் காயமடைந்துள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தினால் 132 வீடுகள் தரைமட்டமாகியதுடன் 161 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனர்த்தம் காரணமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்போது இருப்பிடங்களை இழந்தவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.