எல்ப்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பில் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படுமென காலி மாவட்ட செயலாளர் சோமரத்ன விதான பத்திரன தெரிவித்துள்ளார். தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் தேர்தலை நடாத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்பும் பெறப்படவுள்ளது. இதற்கென விசேட கலந்துரையாடலொன்றும் எதிர்வரும் வாரத்தில் இடம்பெறுமென காலி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எல்ப்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 13ம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.