fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

2வது உலக யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட 500 கிலோகிராம் எடைகொண்ட குண்டொன்று கண்டுபிடிப்பு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2019 14:57

2வது உலக யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட 500 கிலோகிராம் எடைகொண்ட குண்டொன்று கண்டுபிடிப்பு

இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட 500 கிலோகிராம் எடைகொண்ட குண்டொன்று பொஸ்னியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டிருந்த சிலர் குறித்த குண்டை கண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மிக மோசமான அழிவை ஏற்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த குண்டே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த குண்டு பிரித்தானிய விமானப்படைக்கு சொந்தமானதென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

500 கிலோகிராம் எடைகொண்ட குண்டு ஒருசில தினங்களில் செயலிழக்கச்செய்யப்படுமென பொஸ்னியா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனால் குண்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை சூழவுள்ள பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2019 14:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க