தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் தமன்னா. பாலிவுட்டில் பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஆக்ஷன் படத்தில் நடித்து வருகிறார். இதில் தமன்னா ராணுவ கமாண்டோவாக நடிக்கிறார். இதுபற்றி பட இயக்குனர் சுந்தர் சி, கூறும்போது, ’ராணுவ பெண் கமாண்டோவாக தமன்னா நடிக்கிறார். விஷாலுடன் இவரும் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால் அதற்கான பயிற்சிகள் பெற்று நடித்துள்ளார்.