874 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பத்தேகம பிரதேச செயலாளர் அலுவலக கட்டட தொகுதி இன்று திறந்துவைக்கப்படும். நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. மக்களுக்கு செயற்திறன் மிக்க சேவையை வழங்கும் நோக்குடன் பத்தேகம பிரதேச செயலக கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆட்பதிவு திணைக்களத்தின் தென்மாகாண கிளை இன்று திறந்துவைக்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நிகழ்வு இடம்பெறும். ஒருநாள் சேவை உட்பட ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து சேவைகளையும் அங்கு பெற்றுக்கொள்ள முடியும்.