அவுஸ்திரேலிய – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ம் நாள் ஆட்டம் இன்று
Related Articles
அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது இங்கிலாந்து அணி தனது முதல் இனிங்சிற்காக ஒரு விக்கெட்டை இழந்து 23 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஏற்கனவே துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி தனது முதல் இனிங்சிற்காக 8 விக்கெட்டுக்களை இழந்து 497 ஓட்டங்களை பெற்றது. ஸ்டீவன் ஸ்மித் 211 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் ஸ்டுவர்ட் ப்ரோட் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.