fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஒழுக்கம் மற்றும் பண்பாடுடன் செயற்படுமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்து

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2019 13:53

ஒழுக்கம் மற்றும் பண்பாடுடன் செயற்படுமாறு சபாநாயகர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்து

ஒழுக்கம் மற்றும் பண்பாடுடன் செயற்படுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். சபை நடவடிக்கைகள் தொடர்பில் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகள் பாராளுமன்றத்தின் நற்பெயருக்கு பாதிப்பாக அமைந்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் சபை நடவடிக்கைகளின் போது சில உறுப்பினர்கள் மோசமான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளனர். பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் சம்பிரதாயத்தை பாதிக்கும் விதத்தில் உறுப்பினர்கள் செயற்படக்கூடாதென சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார். இன்று முற்பகல் 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடிய போதே சபாநாயகர், உறுப்பினர்களுக்கு குறித்த அறிவுரைகளை வழங்கினார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2019 13:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க