fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிம்பாப்வேயின் மூன்று தசாப்த கால ஆட்சியாளர் ரொபேர்ட் முகாபே மரணம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2019 13:27

சிம்பாப்வேயின் மூன்று தசாப்த கால ஆட்சியாளர் ரொபேர்ட் முகாபே மரணம்

சிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே இயற்கை எய்தியுள்ளார். மரணிக்கும் போது அவருக்கு 95 வயதாகும். சிம்பாப்வே சுதந்திரத்தின் பின்னர் முதலாவது ஜனாதிபதியாக ரொபேர்ட் முகாபே தெரிவானார்.

1980ம் ஆண்டு சிம்பாப்வே பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட அவர், அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி பதவியை பெற்றுக்கொண்டார். நீண்டகாலம் சிம்பாப்வேயை ஆட்சிசெய்த ரொபேர்ட் முகாபே கடந்த 2000ம் ஆண்டு சர்வதேச நாடுகளின் விமர்சனத்திற்கு ஆளானார். சிம்பாப்வே இராச்சியத்திலுள்ள வெள்ளையர்களின் சொத்துக்களை அரசுடைமையாக்கியதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள் முகாபேயை விமர்சித்தன.

அவரது மூன்று தசாப்த ஆட்சிக்காலம் கடந்த 2017ம் ஆண்டு நிறைவுற்றது. ரொபேர்ட் முகாபே அவரது இளவயது மனைவியை உப ஜனாதிபதியாக நியமித்தமையினால் நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இராணுவம், ரொபேர்ட் முகாபே உட்பட குடும்பத்தாரை கைதுசெய்து வீட்டுக்காவலில் வைத்தது. இதனையடுத்து முகாபே ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தார். இந்நிலையில் கடந்த சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த ரொபேர்ட் முகாபே இயற்கை எய்தியுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 6, 2019 13:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க