fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தெற்கு நெடுஞ்சாலையையும் கட்டுநாயக்க நெடுஞ்சாலையையும் இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2019 15:06

தெற்கு நெடுஞ்சாலையையும் கட்டுநாயக்க நெடுஞ்சாலையையும் இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

தெற்கு நெடுஞ்சாலையையும் கட்டுநாயக்க நெடுஞ்சாலையையும் இணைக்கும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் 15 அம் திகதி ஆரம்பிக்கப்படுமென வீதி அபிவிருத்திஅதிகார சபையின் தலைவர் நிஹால் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த வீதி அபிவிருத்தி அதிகார சபை தலைவர் நிஹால் ரஞ்சன்  ;

கடவத்தையிலிருந்து கெரவலப்பிட்டிய வரையிலான 10 கிலோ மீட்டர் நீளமான பகுதியின் நிர்மாண பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் 15 ஆம் திகதியளவில் தெற்கையும் கட்டுநாயக்க நெடுஞ்சாலையையும் இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும். கொழும்பு நகருக்கு வருகைதருவோருக்கு இது மிக இலகுவாக அமைவதுடன் நெரிசலையும் குறைத்து கொள்ள முடியும். பாணந்துறை மற்றும் ஹொரண ஆகிய இடங்களுக்கு கொழும்புக்கு வருகை தராது கட்டுநாயக்க நெடுஞ்சாலை ஊடாக வருகைதந்து அங்கு செல்ல முடியும். என தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2019 15:06

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க