fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஸ்ரீதேவி புகையிரதம் காங்கேசன்துறை நோக்கி பயணம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2019 14:35

ஸ்ரீதேவி புகையிரதம் காங்கேசன்துறை நோக்கி பயணம்

வடக்கு புகையிரத சேவையில் 2 புகையிரதங்கள் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் ஸ்ரீதேவி புகையிரதம் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை சேவையில் ஈடுபடுத்தப்படுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இங்கு கருத்து தெரிவித்த புகையிரதபோக்குவரத்து அத்தியட்சகர்

“இன்றைய தினம் மாலை 3.55 இற்கு வவுனியாவுக்கு இதற்கு முன்னர் பயணித்த புகையிரத சேவை காங்கேசன்துறை வரை நீடிக்கப்பட்டுள்ளது. புகையிரத பொது முகாமையாளரினால் இதற்கு ஸ்ரீதேவி என பெயரிடப்பட்டுள்ளது.இப்புகையிரதம் விசேட இயந்திர தொகுதிகளை கொண்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கும் இதனால் வசதிகள் கிடைக்கின்றன. யாழ்ப்பாணத்திற்கு புதியதொரு புகையிரதம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதனால் மக்களுக்கு பெரும் பயன் கிடைக்கின்றன.” என தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2019 14:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க