fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அடுத்தாண்டில் 28 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கு

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2019 14:43

அடுத்தாண்டில் 28 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கு

அடுத்தாண்டளவில் 28 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை அடிப்படையாக வைத்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் மலிக் சமரவிக்ரம இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற செயல்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி, செயல்படுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரிஎல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்திற்கு வருகை தராமையினால் வாய்மூல கேள்விகளுக்கான பதில்கள் வழங்கப்படவில்லை.

அதனை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோருக்கான நஷ்டஈடு தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதன் போது, அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல பதிலளிக்கையில் உயிர்ச்சேதங்கள் மற்றும் இழப்புக்கள் குறித்து 95 வீத நட்டஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இலங்கை ஏற்றுமதிஅபிவிருத்தி சட்டமூலம் குறித்த விவாதம் இடம்பெற்றது. அமைச்சர் மலிக் சமரவிக்ரம 2020 ஆம் ஆண்டளவில் 28 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை அடையவுள்ளதாக தெரிவித்தார்.

ஏற்றுமதிக்கான புதிய வர்த்தக சந்தைகளை இனங்காண வேண்டியுள்ளதாகதெரிவித்த அவர் சுமார் 2 ஆயிரம்ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும்வேலைத்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவ்pத்தார். புதிய ஏற்றுமதியாளர்களை இனங்கண்டு மூலதனங்களைவழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டார். ஒரு கிராமத்திற்கு ஒரு ஏற்றுமதி கைத்தொழிற்சலை ஒன்றை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை செயல்படுத்த போவதாகவும் அவர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 5, 2019 14:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க