டோரியான் சூறாவளி அமெரிக்காவின் கிழக்கு கரையோரத்தை ஊடுறுவும் அச்சுறுத்தல் காணப்படுவதாக வளிமண்டலவியல் பிரிவு எச்சரித்துள்ளது. புளோரிடா மாநிலத்திலிருந்து வேர்ஜீனியா வரையிலான கரையோர பகுதிகளிலுள்ள பொது மக்களுக்கு அவசர ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டோரியன் சூறாவளியானது கெருபியன் பஹாமாஸ் தீவில் அண்மையில் ஊடுருவியதை தொடர்ந்து அங்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டன. கடுமையான காற்றுடன் பெய்த மழையில் சிக்குண்டு 20 பேர் பலியாகியுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.