fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரக்ஸிட்தோல்வியை தொடர்ந்து தேர்தலை நடத்த யோசனை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2019 14:44

பிரக்ஸிட்தோல்வியை தொடர்ந்து தேர்தலை நடத்த யோசனை

ஒப்பந்தமின்றி ஐரோப்பிய சங்கத்திலிருந்து விலகுவதற்கான யோசனை பிரித்தானிய பாராளுமன்றத்தில் தோல்வியடைந்துள்ளது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பிரதிநிதிகள் 21 பேர் யோசனைக்கு எதிராக வாக்களித்திருந்தனர். இதற்கமைய பிரித்தானியா, ஐரோப்பிய சங்கத்திலிருந்து விலகுவதற்கான வேலைத்திட்டங்கள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்த மாதம் முதல் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. யோசனை தோல்வியடைந்தால் அவசர தேர்தலொன்று நடத்தப்படுமென ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்திருந்தார். இதேவேளை தானும் தேர்தலுக்கு தயாராக இருப்பதாக தொழில் கட்சியின் தலைவர் ஜேரமி கொபின் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 4, 2019 14:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க