பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் சிலருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவை தேவையின் கீழ் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 14 பிரதான பொலிஸ் பரிசோதகர்களுக்கும் மற்றும் 23 பொலிஸ் பரிசோதகர்களுக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.