fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சியோன் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதலை நடத்தியவரின் உடற்பாகங்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளன

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 2, 2019 13:27

சியோன் தேவாலயத்தில் குண்டுத்தாக்குதலை நடத்தியவரின் உடற்பாகங்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளன

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை நடத்திய நபரின் உடற்பாகங்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளன. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய தாக்குதலை நடத்திய மொஹமட் நாசார் மொஹட் அசாத்தின் தலை மற்றும் உடற்பாகங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய தற்கொலை குண்டுதாரியின் தலை கள்ளியன் காடு இந்து மையானத்தில் புதைக்கப்பட்டது. இதற்கு பிரதேசவாசிகள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர். இதுதொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மீண்டும் ஒருமுறை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதற்கமைய குண்டுதாரியின் தலையை வேறொரு மையானத்தில் புதைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் உத்தரவிட்டார். அதற்கான உரிய இடத்தை தீர்மானிக்கும் வரை தலை மற்றும் உடல்பாகங்களை பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மட்டக்களப்பு பொது வைத்தியசாலையில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 2, 2019 13:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க