இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ரி20 போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெடடுக்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதற்கமைய 175 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய நியூஸிலாந்து அணி 19.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.