பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நாளை கூடவுள்ளது

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 1, 2019 17:36

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நாளை கூடவுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நாளை கூடவுள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு பாராளுமன்றத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார். சந்திப்பின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கையை தயாரிப்பதற்கான குழு உறுப்பினர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட எழுத்து மூல கோரிக்கைக்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி அது தொடர்பில் பதில் வழங்கவில்லை என்றால், உடனடியாக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் அறிக்கையை தயாரிக்க எதிர்ப்பார்ப்பதாக ஆனந்த குமாரசிறி மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 1, 2019 17:36

Default