fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

புதுக்கடை நீதவான் நீதிமன்ற பகுதியில் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 1, 2019 14:27

புதுக்கடை நீதவான் நீதிமன்ற பகுதியில் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

புதுக்கடை நீதவான் நீதிமன்ற பகுதியில் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் செப்டெம்பர் 10ம் திகதி வரை குறித்த தடை அமுலில் இருக்குமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது அமைதியைக் சீர்குலைக்கும் எவ்வித செயற்பாடுகளும் இடம்பெறக்கூடாதென நீதிமன்ற உத்தரவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டரீதியான மற்றும் அமைதியான முறையில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள், பேரணிகளுக்கு தடையில்லையென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 1, 2019 14:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க