சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 112 பில்லியன் டொலர் தீர்வை வரியை இன்று முதல் நடைமுறைப்படுத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது. குறித்த செயற்பாடானது இருநாடுகளுக்கிடையில் காணப்படும் வர்த்தகப்போர் மேலும் அதிகரிப்பதற்கு காரணமாக அமையுமென பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வர்த்தகப்போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அண்மையில் சீனா தெரிவித்தது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட சர்ச்சைக்குரிய தீர்மானமாகவே இது கருதப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.