வலி கட்டுப்பாட்டு தாதியர் பயிற்சி முதற்தடவையாக நாளைய தினம் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 1, 2019 13:04

வலி கட்டுப்பாட்டு தாதியர் பயிற்சி முதற்தடவையாக நாளைய தினம் ஆரம்பம்

வலி கட்டுப்பாட்டு தாதியர் பயிற்சி முதற்தடவையாக நாளைய தினம் இலங்கையில் ஆரம்பமாகவுள்ளது. சர்வதேச தரத்திற்கமைய பயிற்சிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாவது பயிற்சி குழுவுக்கென 40 தாதிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான ஆரம்ப நிகழ்வு நாளை முற்பகல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor செப்டம்பர் 1, 2019 13:04

Default