fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இம்முறை பெரிய வெங்காய அறுவடை அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 14:37

இம்முறை பெரிய வெங்காய அறுவடை அதிகரிப்பு

இம்முறை பெரிய வெங்காய அறுவடை அதிகரித்துள்ளதாக ரஜரட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அறுவடைக்கு சிறந்த விலை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மகாவெலி எச் வலயத்தின் பொலன்னறுவை மற்றும அநுராதபுரம் ஆகிய மாவடடங்களில் இம்முறை செய்கைபண்ணப்பட்ட பெரிய வெங்காயத்தின் மூலம் வெற்றிகரமான அறுவடை கிடைத்துள்ளது. விவசாயிகளுக்கு பெரிய வெங்காய விதைகள் வழங்கப்பட்டமை சிறந்த காலநிலை காணப்பட்டமை போன்ற அறுவடை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்தன.

மகாவெலி எச் வலயத்தில் மாத்திரம் 150 ஏக்கர் நிலப்பரப்பில் பெரிய வெங்காயம் செய்கை பண்ணப்பட்டது. இதன் முதலாவது அறுவடை விழா கோணபத்திராவ கிராமத்தில் இலங்கை மகாவெலி அதிகார சபை உயர அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய இடம்பெற்றது. அரை ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட பெரிய வெங்காய செய்கையின் மூலம் 3 ஆயிரத்து 500 கிலோ கிராம் அறுவடை கிடைத்துள்ளது. ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கு 120 தொடக்கம் 130 ரூபா வரையிலான உயர்ந்த விலை காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 14:37

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar174.31178.06
USA
Pound219.38226.29
UK
Euro195.48202.19
EU
Yen1.591.65
Japan
Yuan25.1126.28
China
Dollar120.42125.45
Australia
CountryCurrencyRate
Dinar467.71
Dinar580.41
Riyal457.99
Riyal48.42
Riyal47.01
Dirham48.00