fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியா ரஷ்யாவிடமிருந்து 40 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான ஆயுதம் கொள்வனவு

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 12:55

இந்தியா ரஷ்யாவிடமிருந்து 40 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான ஆயுதம் கொள்வனவு

இந்தியா, ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை தடுப்பு ஆயுதங்களை கொள்வனவு செய்யவுள்ளது. எஸ் – 400 ஏவுகணை தடுப்பு ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதற்கான முற்பணத்தை இந்தியா வழங்கியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ஆயுத கொள்வனவு தொடர்பில் கடந்த வருடம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 40 ஆயிரம் கோடி இந்திய ரூபா பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

எனினும் முற்பணம் செலுத்தும் நடைமுறையில் இரு நாடுகளுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. தற்போது முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியா முற்பணத்தை முழுமையாக செலுத்தியுள்ளதாக ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 12:55

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க