fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியது தொடர்பாக விசாரணை

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 12:23

இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியது தொடர்பாக விசாரணை

இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியது தொடர்பான விசாரணைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. விசாரணைக்குழு அதன் பணிகளை ஆரம்பித்துள்ளது. விபத்து தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க புகையிரத சேவைகள் பொது முகாமையாளரால் குழு நியமிக்கப்பட்டது.

புகையிரத சேவை பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் நேரெதிரே பயணித்தமையினால் விபத்து ஏற்பட்டது.

எனினும் அதிஷ்டவசமாக எவ்வித சேதங்களும் நிகழவில்லை. ரயிலொன்றின் சாரதி சமிக்ஞை எச்சரிக்கையை கவனத்திற்கொள்ளாமல் செயற்பட்டமையே ஒரே தண்டவாளத்தில் இரு பயணிக்க காரணமென கண்டறியப்பட்டது. இதனால் குறித்த ரயிலின் சாரதி, உதவியாளர் மற்றும் ஒழுங்குபடுத்துனர்கள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஆகஸ்ட் 30, 2019 12:23

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க